ஒன்ராறியோவில் உள்ள மருத்துவமனைகளில் அவசரமற்ற அனைத்து அறுவைச் சிகிச்சைகளையும், உடனடியாக நிறுத்துமாறு, கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களால் மருத்துவனைகள் அதிகளவில் நிரம்பி வரும் சூழலில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான அறிவுறுத்தலை ஒன்ராறியோவின் தலைமை சுகாதார மருத்துவ அதிகாரி மருத்துவர் டேவிட் வில்லியம்ஸ் (David Williams) அனைத்து மருத்துவமனைகளுக்கும் அனுப்பியுள்ளார்.
அறுவைச் சிகிச்சைகளை பிற்போடும் நடவடிக்கையின் போது, நோயாளிகளுக்கு நியாயமானதும், வெளிப்படைத்தன்மை கொண்டதுமான நடைமுறை கையாளப்பட வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.