முல்லைத்தீவு – கரைத்துறைப்பற்று பிரதேச சபையின் புதிய தவிசாளராக ரெலோவைச் சேர்ந்த கமலநாதன் விஜிந்தன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
கடந்த மூன்று வருடங்களாக கரைதுறைப்பற்று பிரதேசசபையின் தவிசாளராக பதவி வகித்து வந்த புளொட் அமைப்பைச் சேர்ந்த, கனகையா தவராசா, பதவி விலகியதை அடுத்து, இன்று புதிய தவிசாளர் தெரிவு இடம்பெற்றது.
வடமாகாண உள்ளுராட்சி ஆணையாளர் தலைமையில் இடம்பெற்ற வாக்கெடுப்பில், கமலநாதன் விஜிந்தன் புதிய தவிசாளராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
24 உறுப்பினர்களை கொண்ட கரைத்துறைப்பற்று பிரதேச சபையில் இன்றைய வாக்கெடுப்பில் பங்கேற்ற 22 உறுப்பினர்களில் 15 பேர் விஜிந்தனுக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர்.
பொதுஜன பெரமுனவின் 3 உறுப்பினர்களும், ஐக்கிய தேசிய கட்சியின் 1 உறுப்பினரும், பொதுஜன பெரமுன வேட்பாளர் அன்ரனி ரங்கதுஷாரவுக்கு ஆதரவாக வாக்களித்தனர்.
சுயேட்சை உறுப்பினர்கள் 2 பேர் மற்றும் ஈபிடிபி உறுப்பினர் ஒருவர் என மூவர் நடுநிலை வகித்துள்ளனர்.