சீன பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் வெய் பெங்கி அடுத்த வாரம் சிறிலங்காவுக்கு அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொள்ளவுள்ளார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சிறிலங்கா அரசாங்கத் தகவல் திணைக்களம் இன்று இதனை அதிகாரபூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது.
எதிர்வரும் 27ஆம் நாள் கொழும்புக்குப் பயணம் மேற்கொள்ளும் சீன பாதுகாப்பு அமைச்சர், 29ஆம் நாள் வரையான மூன்று நாட்கள் அங்கு தங்கியிருப்பார் என்றும் சிறிலங்கா அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கோட்டாபய ராஜபக்ச அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர், சிறிலங்கா செல்லும் சீனாவின் மிக உயர்மட்ட அரசாங்கப் பிரதிநிதி இவர் என்றும் தகவல்கள் கூறுகின்றன.
இவர் சிறிலங்கா ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட அரசாங்க தலைவர்கள் மற்றும் அதிகாரிகளுடன் இருதரப்பு பேச்சுக்களை முன்னெடுப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.