வவுனியா – ஓமந்தை பகுதியில் இன்று ஒரே தொடருந்து இருவேறு இடங்களில் மோதியதில், ஒருவர் காயமடைந்துள்ளதுடன், 16 எருமை மாடுகள், உயிரிழந்துள்ளன.
யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற கடுகதி தொடருந்து, ஓமந்தை பகுதியில் எருமை மாடுகள் மீது மோதியுள்ளது.
இதில், 16 எருமை மாடுகள் அந்த இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்துள்ளன.
அதேவேளை, இந்தக் கடுகதி தொடருந்து இன்று காலை, திருநாவல்குளம் பகுதியில் உந்துருளி ஒன்றின் மீதும் மோதியுள்ளது.
பாவவுனியா – திருநாவல்குளம் பகுதியில் உள்ள பாதுகாப்பற்ற ரயில் கடவையில் ரயில் மோதி மோட்டார் சைக்களில் சென்றவர் காயமடைந்துள்ளார்.
பாதுகாப்பற்ற தொடருந்து கடவையை கடந்து செல்ல முயன்ற ஒருவரே, இந்த விபத்தில் காயமடைந்துள்ளார்.