அமெரிக்கா தலைமையில் நடைபெறும் சர்வதேச பருவநிலை மாநாட்டில், பிரதமர் நரேந்திர மோடி இன்று உரையாற்றுகிறார்.
பருவநிலை மாற்றம் தொடர்பாக இரண்டு நாள் சர்வதேச மாநாட்டிற்கு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் ஒழுங்கு செய்துள்ளார்.
குறித்த மாநாடு இன்று ஆரம்பமாகுகிறது. இதில் இந்தியா, ரஷ்யா, சீனா உள்ளிட்ட 40 நாடுகளின் தலைவர்கள் காணொளி காட்சி மூலம் பங்கேற்கவுள்ளனர். இதன்போது பிரதமர் நரேந்திர மோடி 2030 ஆண்டின் பருவநிலை இலக்கை அடைய செயற்பட வேண்டும் என்ற தலைப்பில் பேசவுள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது