குருநாகல் மாவட்டத்தின் குளியாப்பிட்டி காவல்துறை பிரிவுக்கு உட்பட்ட பிரதேசத்தை முடக்குவதற்கு கொவிட் தடுப்புக்கான தேசிய செயலணி தீர்மானித்துள்ளது.
இதன்படி இன்று நள்ளிரவு முதல் குறித்த பிரதேசம் முடக்கப்படும் என்று கொவிட் தடுப்புக்கான தேசிய செயலணியின் பிரதானியான இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
குளியாப்பிட்டி பிரதேசத்தில் கடந்த சில நாட்களாக அதிகளவான கொரோனா தொற்றாளர்கள் பதிவாகி வரும் நிலையிலேயே இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, இரண்டு மாதங்களின் பின்னர் இரண்டாவது நாளாகவும் இன்று 500க்கும் அதிகமான கொரோனா தொற்றாளர்கள் நாட்டில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அதற்கமைய, நாட்டில் இன்று இதுவரையில் 520 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தொற்றுநோயியல் பிாிவு தொிவித்துள்ளது.
அதற்கமைய, நாட்டில் இனங்காணப்பட்டுள்ள மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 98, ஆயிரத்து 570 ஆக அதிகரித்துள்ளது.
மேலும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு விடுத்துள்ள நாளாந்த புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்றால் பதிவான மரணங்களின் எண்ணிக்கை 634 ஆக அதிகரித்துள்ளது