பெருமளவில் கொரோனா தொற்று அதிகரித்துள்ளதால் இந்தியாவில் இருந்து வரும் வானூர்திகளை கனடிய சமஷ்டி அரசு கவனித்து வருவதாக, கனடாவின் உயர்மட்ட பொது சுகாதார மருத்துவர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தகவல் வெளியிட்டுள்ள மருத்துவர் தெரெசா டாம் (Theresa Tam), குறிப்பிட்ட சில நாடுகளில் இருந்து பயணத்தை கட்டுப்படுத்துவது குறித்து அரசாங்கம் ஆராயும் என்றும், இந்தியா விசேடமாக கருதப்படக் கூடும் என்றும் தெரிவித்துள்ளார்.
திரிபடைந்த கொரோனா பரவிவரும் நாடுகளில் இருந்து பயணங்களை தடுக்காவிட்டால் கடுமையான நெருக்கடிகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், இந்தியாவில் இருந்து வரும் வானூர்திகளின் பயணத்தை மட்டுப்படுத்த வேண்டும் என்று ஒட்டாவா அரசுக்கு அழுத்தங்கள் அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.