எதிர்காலத்தில் ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் போன்ற சம்பவங்களை நடக்காமல் தடுப்பதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு, புலனாய்வுப் பிரிவுகளுக்கு சிறிலங்கா அரசாங்கம் அறிவுறுத்தியுள்ளது.
இதுகுறித்து தகவல் வெளியிட்டுள்ள சிறிலங்கா பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன,
“புலனாய்வு சேவைகள் நன்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதுடன், தகுதிவாய்ந்தவையாக உள்ளன.
ஆனாலும், அவர்கள் தமது பணியில் கவனம் செலுத்த பொருத்தமான சூழல் தேவை.
எமது புலனாய்வு சேவைகள் இப்போது சிறப்பாக செயற்படுவதால் முந்தைய தவறுகளை நாங்கள் மீண்டும் செய்யவில்லை.” என்று தெரிவித்துள்ளார்.