கிளிநொச்சி நகரை அண்டிய, ஆனந்தபுரம் கிழக்கு பகுதிக்குள் நுழைந்த சிறுத்தை, வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளால், அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளது.
இன்று காலை ஆனந்தபுரம் கிழக்கு பகுதியில் உள்ள நாகராஜா செந்தில்குமரன் என்பவரது காணிக்குள் புகுந்த சிறுத்தை, மரத்தில் ஏறிப் பதுங்கியிருந்தது.
இதனை அவதானித்த வீட்டு உரிமையாளர் சிறிலங்கா படையினருக்கு, அறிவித்ததை அடுத்து, அவர்கள் வன ஜீவராசிகள் திணைக்களத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.
அவர்கள் நீண்ட நேர முயற்சியின் பின்னர், சிறுத்தையை பாதுகாப்பாக வெளியேற்ற நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். எனினும், நகரை அண்மித்த குறித்த பகுதியில், சிறுத்தை நுழைந்துள்ளமை குறித்து, அங்குள்ள மக்கள் அச்சமடைந்துள்ளனர்