பாலி தீவுக்கு அப்பால் புதன்கிழமை காணாமல்போன, இந்தோனேசியா கடற்படையின் நீர்மூழ்கிக் கப்பலில் இருந்த 53 மாலுமிகளும் இறந்திருக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
காணாமல் போன நீர்மூழ்கி கப்பல் கடலில் மூழ்கி விட்டதாக இந்தோனேசிய கடற்படை இன்று அறிவித்துள்ளது.
நீர்மூழ்கிக் கப்பல், மூழ்கியதாக கருதப்படும், இடத்தில் இருந்து, கப்பலின் சில பாகங்களும், தொழுகை விரிப்புகளும் மீட்புக்குழுவினரால் கண்டெடுக்கப்பட்டுள்ளன என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து இந்தோனேசிய கடற்படை தளபதி யூடோ மார்கோனோ (Yudo Margono )செய்தியாளர்களிடம் கூறுகையில்
‘‘நீர்மூழ்கி கப்பலில் இருந்து வந்ததாக நம்பப்படும் உண்மையான ஆதாரங்கள் மூலம், காணாமல் போன நீர்மூழ்கி கப்பல் என்ற கட்டத்தில் இருந்து, கடலில் மூழ்கிய நீர்மூழ்கி கப்பல் என்ற கட்டத்துக்கு நாங்கள் வந்து விட்டோம்.
கப்பலில் இருந்த 53 மாலுமிகளுக்கான ஒக்சிஜன் இன்று அதிகாலையுடன் முடிந்து விட்டதால், யாரும் உயிர் தப்பியிருக்க வாய்ப்பு இல்லை. நீர்மூழ்கி கப்பல் 850 மீற்றர் ஆழத்தில் இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்