லிற்றோ நிறுவனத்தினால் புதிதாக சந்தைக்கு அறிமுகப்படுத்தப்பட்ட சமையல் எரிவாயு கொள்கலன்களின் எரிதிறன் தொடர்பான தொழிநுட்ப பரிசோதனைகள் இடம்பெறவுள்ளன.
இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண இதனை தெரிவித்துள்ளார்.
இதற்காக குறித்த சமையல் எரிவாயு கொள்கலன்கள் மூன்று அரச நிறுவனங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த நிறுவனத்தினால் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டு சந்தைக்கு விநியோகிக்கப்பட்ட சமையல் எரிவாயு கொள்கலன்கள் தொடர்பில் பல்வேறு சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளது.
18 லீற்றர் அளவிலான சமையல் எரிவாயு கொள்கலன்களையே இவ்வாறு லிற்றோ நிறுவனம் அண்மையில் அறிமுகப்படுத்தியிருந்தது.
12. 5 கிலோகிராம் நிறையுடைய சமையல் எரிவாயு கொள்கலனைவிட 100 ரூபாவினால் விலை குறைக்கப்பட்டு குறித்த புதிய சமையல் எரிவாயு கொள்கலன்கள் அறிமுகப்படுத்தப்பட்டிருந்தன. எனினும், குறைக்கப்பட்ட விலையினை காட்டிலும் மேலதிகமாக, புதிய சமையல் எரிவாயு கொள்கலன்களின் நிறை குறைக்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது