கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ளதை அடுத்து. தமிழகத்தில் ஏழு மாதங்களுக்கு பின்னர், முழு ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளதுடன், புதிய கட்டுப்பாடுகளையும் தமிழக அரசு அறிவித்துள்ளது.
இன்றிரவு 10 மணிக்கு அமுலுக்கு வந்த ஊரடங்கு திங்கட்கிழமை அதிகாலை வரை நடைமுறையில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, வரும் 26-ஆம் நாள் அதிகாலை 4 மணி முதல் பெரிய வணிக நிலையங்கள், வணிக வளாகங்கள் மூடப்படும் என்றும், திரையரங்குகள், உடற்பயிற்சிக் கூடங்கள், கேளிக்கை விடுதிகள், செயற்படாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
உணவகங்கள், தேநீர் சாலைகளில் பொதிகளில் மட்டுமே, விநியோகம் இடம்பெறும் எனவும், சென்னை உட்பட மாநகராட்சிகள், நகராட்சிகளில் அழகு நிலையங்கள், சிகைஅலங்கார நிலையங்களை மூடவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
அனைத்து வழிபாட்டு தலங்களிலும் பொதுமக்களுக்குத் தடைவிதிக்கப்பட்டுள்ளது.