கிழக்கு ஜெருசலேம் நகரில் பலஸ்தீனர்கள் நடத்திய போராட்டத்தின் போது நடந்த வன்முறைகளில் 120 பேர் காயமடைந்துள்ளனர்.
1967-ம் ஆண்டு மத்திய கிழக்கு போரின் போது, கிழக்கு ஜெருசலேம் மற்றும் மேற்குகரை பகுதிகளை இஸ்ரேல் ஆக்கிரமித்ததுடன், கிழக்கு ஜெருசலேத்தை தனது தலைநகராகவும் அறிவித்தது.
இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் பாலஸ்தீனர்கள், கிழக்கு ஜெருசலேம் நகரில் இஸ்ரேலின் ஆக்கிரமிப்புக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
நேற்று இரவு பாலஸ்தீனர்கள் கிழக்கு ஜெருசலேம் நகரில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தபோது, அதற்கு எதிராக தீவிர தேசியவாத யூதர்களும், பேரணி நடத்தினர்.
இந்த பேரணியின் போது, இரு தரப்பும், கற்கள் மற்றும் போத்தல்களை வீசி எறிந்து தாக்கிக் கொண்டனர்.
காவல்துறையினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் தண்ணீரை பீய்ச்சி அடித்தும் போராட்டக்காரர்களை விரட்டியடிக்க முயன்ற போது போராட்டக்காரர்கள் அவர்களையும் சரமாரியாக தாக்கினர். இந்த வன்முறைகளால், 100-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்களும் 20-க்கும் அதிகமான காவல்துறையினரும் காயமடைந்துள்ளனர்