ஒக்ஸ்போர்டு-அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி தொடர்பில் அச்சமடைய வேண்டியதில்லை என்று பிரதமர் ஜஸ்டின் ரூடோ அறிவித்துள்ளார்.
ஐக்கிய அமெரிக்காவில் உற்பத்தியாகும் இந்த தடுப்பூசி தொடர்பில் வீணான கவலைகள் காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
தானும், மனைவியும் இந்த தடுப்பூசியின் மருந்தளவையே செலுத்திக்கொண்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
அதேநேரம் அவசர தேவைக்காக 1.5மில்லியன் கொரோனா தடுப்பூசியை உடனடியாக அமெரிக்காவிடத்திலிருந்து கொள்வனவு செய்யும் செயற்பாட்டை முன்னெடுக்குமாறு விடதானத்திற்கு பொறுப்பான அமைச்சர் அனித்தா ஆனந்திற்கு அறிவுறுத்தியுள்ளதாகவும் அவர் கூறினார்.