கனடாவில் வைத்தியசாலையில் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்து வருவாக பொதுசுகாதாரத்துறையின் தலைமை வைத்திய அதிகாரி வைத்தியர் தெரேசா டாம் தெரிவித்தார்.
அத்துடன் கொரோனா தொற்றுகு உள்ளாகி வைத்திய சாலையில்சாதாரண வாட்டுகளில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் வெகுவாக அதிகரித்துள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.
கடந்த நாட்களில் 20சதவீதமான அதிகரிப்பு நாடாளவிய ரீதியில் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இவ்விதமான அதிகரிப்பு மேலும் அதிரிக்கும் பட்சத்தில் அது பாரதூதுரமாக அமைந்துவிடும் என்றும் அவர் கூறினார். தற்போதைய நிலையிலேயே வைத்தியசாலைகள் நிரம்பி வழிந்துகொண்டிருக்கின்றன என்றும் அவா சுட்டிக்காட்டியுள்ளார்