அரசாங்கத்தில் இருந்து கொண்டு விமர்சனங்களைச் செய்பவர்கள், வெளியே சென்று அரசாங்கத்துக்கு எதிரான தமது போராட்டத்தை தொடர முடியும் என்று சிறிலங்கா பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ள அவர்,
“அவர்கள் வெளியே செல்வதற்கு கதவு எப்போதும் திறந்தே இருக்கிறது.
அரசாங்கத்தை விமர்சனம் செய்வதற்கு எல்லோருக்கும் ஜனநாயக ரீதியாக உரிமை உள்ளது. அரசாங்கத்தின் மடிக்குள் இருந்து அதனைச் செய்பவர்கள், தாராளமாக வெளியே சென்று, அவ்வாறு விமர்சனங்களைச் செய்யலாம்.” என்றும் சிறிலங்கா பிரதமர் மேலும் கூறியுள்ளார்