எரிகாயங்களுடன் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட எட்டு மாத கர்ப்பிணிப் பெண் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார்.
உடுப்பிட்டியைச் சேர்ந்த 19 வயதுடைய சிந்துஜன் ரிசிக்கா என்ற பெண்ணே இந்தச் சம்பவத்தில் உயிரிழந்துள்ளார் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
திருமணமாகி ஒரு வருடமான நிலையில், கடந்த 17ஆம் நாள் எரிகாயங்களுடன் இவர் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார்.
ஆறு நாள்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று முன்தினம் இவர் உயிரிழந்த நிலையில், சந்தேகத்தின் பேரில், பெண்ணின் கணவனான சிந்துஜனை கைது செய்து நீதிமன்றில் முற்படுத்துமாறு திடீர் இறப்பு விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார், காவல்துறையினருக்குப் பணித்துள்ளார்.