யாழ்ப்பாணம் கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலயம் சுகாதாரப் பிரிவினரால் இன்று தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.
சுகாதாரப் பிரிவினரின் அனுமதி பெறாமல், சனசமூக நிலையம் ஒன்றின் விளையாட்டு நிகழ்வை நடத்துவதற்கு பாடசாலை மைதானம் வழங்கப்பட்டதாலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த விளையாட்டு போட்டியில் பல நூற்றுக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர் என்று கூறப்படுகிறது.
இதனைக் கருத்தில் கொண்டு, பாடசாலை, மற்றும் விளையாட்டு மைதானம் ஆகியவற்றை சுகாதார அதிகாரிகள் தனிமைப்படுத்தியுள்ளனர்.