கொரோனா வைரஸ் சூழல் குறித்து அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் இன்று தொலைபேசியில் கலந்துரையாடியுள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுக்கும், இந்தியப் பிரதமர் மோடிக்கும் இடையிலான தொலைபேசி உரையாடல் இன்று இரவு இடம்பெற்றுள்ளது.
இதன்போது, இரு நாடுகளிலும் கொரோனாவால் ஏற்பட்டுள்ள நெருக்கடிகள் குறித்து இருவரும் கேட்டறிந்து கொண்டுள்ளனர்.
இந்த இக்கட்டான சூழலில் இந்தியாவுக்கு செய்த உதவிக்காக ஜனாதிபதி பைடனிடம், இந்தியப் பிரதமர் மோடி நன்றி தெரிவித்துள்ளார்.
கொரோனா தடுப்பூசி தயாரிப்புக்கு தேவையான மூலப் பொருட்கள் மற்றும் மருந்துகளின் விநியோகம் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.
இந்த தொலைபேசி உரையாடல் குறித்து பிரதமர் மோடி தமது ‘கீச்சக’ கணக்கில் பதிவிட்டுள்ளார்.