யாழ்ப்பாணம், உரும்பிராய் சந்தியில் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ள விபத்தில் 12 சிறிலங்கா இராணுவத்தினர் உள்ளிட்ட 15 பேர் காயமடைந்துள்ளனர்.
மணல் ஏற்றிச் சென்ற ரிப்பர் பாரஊர்தி சிறிலங்கா இராணுவத்தினரை ஏற்றிச் சென்ற கன்ரர் வாகனத்தின் மீது மோதி இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்தில், காயமடைந்த 12 சிறிலங்கா இராணுவத்தினரும், 3 பொதுமக்களும், யாழ். போதனா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்தை ஏற்படுத்திய ரிப்பரில் இருந்த இருவர் தப்பிச் சென்றுள்ளதாக கூறப்படும் நிலையில், சிறிலங்கா இராணுவ அதிகாரிகளும் காவல்துறையினரும் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.