பிராம்ப்டனில் 13 வயதுடைய சிறுமி ஒருவர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளார்.
ஒன்ராறியோவில் கொரோனாவுக்கு பலியான மிகவும் இளவயதுடையவர் இந்தச் சிறுமியே என்று தகவல்கள் கூறுகின்றன.
Emily Victoria Viegas என்ற இந்தச் சிறுமியின் மரணத்துக்கு இரங்கல் தெரிவித்து பிராம்ப்டன் நகர முதல்வர் பற்றிக் பிறவுண், கீச்சகப் பதிவு ஒன்றை இட்டுள்ளார்.
கோவிட் 19 மற்றும் உருமாறிய தொற்றுகளின் தீவிரத்தை நாம் ஒருபோதும் குறைத்து மதிப்பிட முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே தமது மனைவிக்கும், மற்றொரு குழந்தைக்கும் தொற்று ஏற்பட்டுள்ளதாக,உயிரிழந்த சிறுமியின் தந்தை தெரிவித்துள்ளார்.