ரொறன்ரோவில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3000 ஐக் கடந்துள்ளது.
நேற்று நகரில் 14 மரணங்கள் பதிவாகிய நிலையில், இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 11 ஆக அதிகரித்துள்ளது.
ரொறன்ரோவில் இரண்டாயிரம் மரணங்கள் பதிவாகி மூன்று மாதங்களின் பின்னர், இந்த எண்ணிக்கை மூவாயிரமாக உயர்ந்துள்ளது.
“இந்த துயரமான மைல் கல் தொற்றுநோயின் தீவிரத்தன்மையையும், தனிநபர்கள் மாகாணத்தின் வீடுகளில் தங்கியிருக்கும் உத்தரவை கடைபிடிக்க வேண்டிதன் அவசியத்தையும் எடுத்துக் காட்டுவதாகவும், கொரோனா பரவுவதைத் தடுக்க உதவும் பொது சுகாதார வழிகாட்டுதல்களை எவ்வாறு பின்பற்ற வேண்டும் என்பதையும் நினைவுபடுத்துவதாகவும், ரொறன்ரோ நகர செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.