பிரம்டனில் 13வயது சிறுமி கொரோனா தொற்றால் உயிரிழந்தமையானது மிகுந்த கவலையை ஏற்படுத்தியுள்ளதாக முதல்வர் டக்போர்ட் தெரிவித்துள்ளார்.
அத்துடன் இந்த வைரஸின் பேரழிவினை அந்த மரணம் காண்பித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் எமது இதயங்களையே மிக மோசமாக அந்த சம்பவம் பாதித்துள்ள நிலையில் பாதிக்கப்பட்ட குடும்ப அங்கத்தவர்களுக்கு எவ்வாறு ஆறுதல் அளிப்பது என்பது தெரியாதுள்ளதாகவும் முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, இவ்விதமான சம்பவங்கள் நடைபெறாதிருப்பதற்கு அனைவரும் சமூகப்பொறுப்புடன் செயற்பட வேண்டியது அவசியம் என்றும் கோரியுள்ளார்.