ஆட்சியைக் கவிழ்க்க சிறிலங்கா சுதந்திரக் கட்சி ஆதரவு வழங்காது என்று அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
“தற்போதைய அரசாங்கத்தை பதவி கவிழ்க்கும் அல்லது, எதிர்க்கட்சியை வலுப்படுத்தும் எந்தவொரு அரசியல் முடிவுக்கும் சிறிலங்கா சுதந்திரக் கட்சி ஆதரவு வழங்காது.
சுதந்திரக் கட்சி ஆட்சியமைக்க முனைவதாக கூறப்படும் தகவல்களில் எந்த உண்மையும் இல்லை.
சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் தமது அரசியல் செயற்பாடுகளில் சில பிரச்சினைகளை எதிர்நோக்குகின்றனர்.
அரசாங்கத்துடன் பேசி அந்தப் பிரச்சினைகளை தீர்த்து வைப்போம்.” என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.