இந்திய – பசுபிக் கடற்பகுதியில் ஏற்படும் சவால்களை எதிர்கொள்ள, ஆறு அணுசக்தி நீர்மூழ்கி கப்பல்கள் தேவை என கடற்படை அதிகாரிகள் அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள இந்திய கடற்படை தலைமை தளபதி கரம்பீர் சிங், குஜராத் மாநிலம் கீழ்வாடியாவில், முப்படை கமாண்டர்களின் மாநாடு சமீபத்தில் இடம்பெற்றது.
இதன்போது இந்திய – பசுபிக் கடல் பகுதியில் இந்தியா சந்தித்து வரும் சவால்கள் பற்றி விவாதிக்கப்பட்டது. சவால்களை வெற்றிகரமாக எதிர்கொள்ள, கடற்படைக்கு ஆறு அணு சக்தி நீர்மூழ்கி கப்பல்கள் தேவை.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள இந்தியாவிற்கு வெளிநாடுகளில் இருந்து ஒக்சிஜன் எடுத்து வரும் பணியில், போர்க்கப்பல்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன