கடந்த வருடம், கொரோனாவுக்குப் பலியான 750 பேரின் உடல்கள் இன்னமும் குளிர்சாதன பெட்டிகளில் பாதுகாக்கப்பட்டு வருகின்றன என்று நியூயோர்க் நகர காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
செய்தியாளர் சந்திப்பில் இதுகுறித்து தகவல் வெளியிட்ட காவல்துறையினர்,
“நாங்கள் விரைவில் இந்த எண்ணிக்கையை குறைக்க இருக்கிறோம். இது தொடர்பாக குடும்பத்தாரிடம் பேசி வருகிறோம்.
இறந்தவர்களின் உடல்களை ஹார்ட் தீவுப் பகுதியில் புதைப்பதற்கு குடும்பத்தினர் விரும்பினால் அதற்கு உடனடியாக நடவடிக்கை எடுப்போம்.” என்றும் தெரிவித்துள்ளனர்.
அதேவேளை, கொரோனா நோயாளிகளின் உடல்களை இவ்வாறு வைத்திருப்பது மிகவும் ஆபத்தானது. உடனடியாக அந்த உடல்களை புதைக்கவோ எரிக்கவோ வேண்டும்’ என, மருத்துவ வல்லுநர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.