கொரோனா தொற்றுக்காலத்தில் மாரடைப்பு நோயின் பாதிப்பு உலகளவில் அதிகரித்துள்ளதாக, ரொறன்ரோ மருத்துவ ஆராச்சியாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, இதேபோக்கை தாங்கள் காண்பதாக, பீல் பிராந்திய மருத்துவப் பணியாளர்களும் தெரிவித்துள்ளனர்.
தொற்றின் முதல் மூன்று மாதங்களில், முன்னைய ஆண்டின் அதே காலப்பகுதியை விட 19 சதவீதம் அதிகமாக மாரடைப்பு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது, என்று, பீல் பிராந்திய மருத்துவ சேவைகள் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, புனித மைக்கல் மருத்துவமனையைச் சேர்ந்த, திடீர் மாரடைப்பு குறித்து ஆய்வு செய்யும் Katie Allen, என்ற ஆய்வாளர், தமது ஆய்வின் போது, பெரும்பாலும் வீடுகளிலேயே மாரடைப்பு ஏற்படுவதாக தெரிவித்துள்ளார்.
அந்த நேரத்தில் மருத்துவ உதவி குழுவினர் செல்லும் போது காலதாமதமாகி விடுகிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.