பிராம்ப்டனில் நேற்று பிற்பகல் இடம்பெற்ற விபத்து ஒன்றில் உந்துருளியில் பயணம் செய்தவர் உயிரிழந்துள்ளார்.
Queen Street West பகுதியில் இருந்து நேற்று பிற்பகல் 12.40 மணியளவில் இந்த விபத்து குறித்த தகவல் தங்களுக்கு கிடைத்ததாக பீல் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மற்றொரு வாகனத்துடனேயே, உந்துருளி மோதி விபத்துக்கு உள்ளாகியுள்ளது.
இந்தவிபத்து தொடர்பான ஏதேனும் காணொளிப் பதிவு உள்ளவர்கள் தங்களுடன் தொடர்பு கொள்ளுமாறு பீல் காவல்துறையினர் அறிவித்துள்ளனர்