முல்லைத்தீவு – வற்றாப்பளை கண்ணகை அம்மன் கோவில் வருடாந்த பொங்கல் உற்சவம், இன்று அதிகாலை, பாக்குத்தெண்டல் நிகழ்வுடன் ஆரம்பமாகியுள்ளது.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, ஆலய நிர்வாகத்தினர் மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் கலந்து கொண்டு, பொங்கல் விழாவுக்கான ஏற்பாடுகள் ஆரம்பித்து வைத்தனர்.
முள்ளியவளை காட்டா விநாயகர் கோவிலில் இருந்து, இன்று அதிகாலை 2 மணிக்கு, வழிபாடுகள் இடம்பெற்று, அதைத் தொடர்ந்து, பாக்குத்தெண்டல் இடம்பெற்றது.
எதிர்வரும் திங்கட்கிழமை, தீர்த்தம் எடுக்கும் நிகழ்வும் அதனை தொடர்ந்து 24ஆம் நாள், திங்கட்கிழமை, வற்றாப்பளை கண்ணகை அம்மனின் பொங்கல் உற்சவமும் இடம்பெறும்.
கொரோனா பரவல் காரணமாக, வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த உற்சவத்தில் இம்முறை பக்தர்கள் கலந்து கொள்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.





