கோவேக்ஷின் தடுப்பூசி மருந்துகள் மே மாதம் முதலாம் திகதி முதல் தமிழகம், டெல்லி, மகாராஷ்டிரா உள்ளிட்ட 14 மாநிலங்களுக்கு நேரடியாக விநியோகிக்கப்பட்டு வருவதாக பாரத் பயோடெக் நிறுவனத்தின் இணை இயக்குனர் சுசித்ரா எலா தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது கீச்சகப் பக்கத்தில், ‘பாரத் பயோடெக் மே மாதம் முதலாம் திகதி முதல் ஆந்திரம், அஸாம், தமிழகம், சத்தீஸ்கர்,குஜராத், ஜம்மு – காஷ்மீர், ஜார்க்கண்ட், மத்திய பிரதேசம், ஒடிஸா,தெலுங்கானா, உத்தரபிரதேசம், மேற்கு வங்காளம், டெல்லி, மகாராஷ்டிரா ஆகிய மாநில அரசுகளுக்கு, கோவாக்ஷின் தடுப்பூசிகள் நேரடியாக விநியோகிக்கப்படுகின்றன.
இது மத்திய அரசால் பெறப்பட்ட ஒதுக்கீட்டின் அடிப்படையில் இந்த தடுப்பூசிகள் விநியோகிக்கப்படுகிறது.
பிற மாநிலங்களில் இருந்து இது தொடர்பான கோரிக்கைகள் வந்ததை அடுத்து இந்த விநியோகம் நடைபெற்று வருகிறது. இது வாரத்தின் அனைத்து நாட்களிலும் விநியோக நடவடிக்கைகள் இடம்பெறும்’ எனத் தெரிவித்துள்ளார்.