நோர்த் யோர்க் பகுதியில் மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்ட விபத்தில் இரண்டு பேர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Steeles Avenue West இல் நேற்று மாலை 5.50 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
ஒரு வாகனத்தில் சிக்கியிருந்தவர் தீயணைப்பு அதிகாரிகளின் துணையுடன் மீட்கப்பட்டு, உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
காயமடைந்த மற்றுமொருவரும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.