பிரித்தானியாவின் பாசிங்ஸ்டோக் மற்றும் டீன் (Basingstoke and Deane Borough) உள்ளூராட்சி மன்றத்தின் தலைவராக ஜெய் கணேஷ் என்ற ஈழத்தமிழர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
கன்சர்வேட்டிவ் கட்சியைச் சேர்ந்த மூன்று உள்ளூராட்சி மன்ற தலைவர்களில் ஒருவராக, தெரிவு செய்யப்பட்டுள்ள இவர், யாழ்ப்பாணதைச் சேர்ந்தவர் என்றும், யாழ் புனித பத்திரிசியார் கல்லூரி மற்றும் கொழும்பு இந்து கல்லூரியின் பழைய மாணவர் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
பாடசாலை காலத்தில் சிறிலங்கா ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் பகுதி நேரப் பணியாளராகவும் கடமையாற்றியுள்ளார்.
இவர் 2012 முதல் கன்சர்வேடிவ் கட்சி உறுப்பினராக இருந்து வருகிறார் என்றும், தெரிவிக்கப்படுகிறது.