அவுஸ்ரேலியாவில் தற்போது கொரோனா வைரஸ் தாக்கம் படிப்படியாகக் குறைந்து வருகின்ற நிலையில், வரும் டிசம்பர் மாதத்துக்குள் இளைஞர்கள் அனைவருக்கும் தடுப்பு மருந்தை செலுத்த அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
கொரோனா வைரசுக்கு எதிராக சிறப்பாக செயற்படும் அவுஸ்ரேலியாவில், 50 இலட்சம் பேருக்கு தடுப்பு மருந்து தேவைப்படும் நிலையில், தற்போது வரை 25 லட்சம் பேருக்கு தடுப்பு மருந்து செலுத்தப்பட்டுள்ளது.
இன்னும் ஆறு மாதங்களுக்குள் 80 சதவீத மக்களுக்கு தடுப்பு மருந்து செலுத்தப்பட்டு விடும் என்று அவுஸ்ரேலிய அரசு அறிவித்துள்ளது.
குறிப்பாக அவுஸ்ரேலியா இளைஞர்களுக்கு முழுமையாக தடுப்பு மருந்து செலுத்தப்பட்டு விடும் எனவும், அவுஸ்ரேலிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.