கொரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில், சிறிலங்கா முழுவதும், இரவு நேரப் பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இரவு 11 மணி தொடக்கம் அதிகாலை 4 மணி வரை இந்தப் பயணத்தடை, ஊரடங்குச் சட்டம் போன்று நடைமுறைப்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நேரத்தில் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வருவதற்குத் தடைவிதிக்கப்பட்டுள்ளதாகவும், அத்தியாவசிய சேவைக்களுடன் தொடர்புடையவர்கள் மட்டும் வீதிகளில் அனுமதிக்கப்படுவார்கள் என்றும், சிறிலங்கா இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இன்று தொடக்கம் நடைமுறைக்கு வரும் இந்த இரவு நேரப் பயணத்தடை மே 31ஆம் நாள் வரை தொடரும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எந்தக் காரணத்தைக் கொண்டும், 11 மணிக்குப் பின்னர் வீதிகளில் நடமாடவோ, எந்தவொரு நிறுவனங்களும் செயற்படவோ அனுமதிக்கப்படாது என்றும் சிறிலங்கா இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.