கனடாவின் மக்கள் கட்சித் தலைவர் மாக்சிம் பெர்னியருக்கு, (Maxim Bernier) சஸ்காட்செவனின் ரெஜினாவில் பேரணியை நடத்தியதற்காக அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
‘சுதந்திரப் பேரணிகள்’ என்ற தலைப்பில் பல நிகழ்வுகள் இந்த வார இறுதியில் தெற்கு மற்றும் மத்திய சஸ்காட்செவன் முழுவதும் நடந்தன. அவற்றில் பங்கேற்றவர்கள் மாகாணத்தின் சமீபத்திய பொது சுகாதார நடவடிக்கைகளுக்கு எதிராக கருத்துக்களை வெளியிட்டிருந்தனர்
இந்தநிலையில் விக்டோரியா பூங்காவில் நடந்த சுதந்திரப் பேரணியில் கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளை எதிர்த்து கருத்துக்களை வெளியிட்டமைக்காக பெர்னியருக்கு (Bernier) 2 ஆயிரத்து 800 டொலர்கள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
எனினும், மக்கள் கட்சித் தலைவர் மாக்சிம் பெர்னியர்(Maxim Bernier), இதை நியாயமற்றது என்றும் அரசியலமைப்பிற்கு விரோதமானது என்று விபரித்தார்.
இந்த நிகழ்வில் சுமார் 200பேர் கலந்து கொண்ட அதேநேரம் சஸ்காட்செவன் பொது சுகாதார ஆணையை மீறியதற்காக மொத்தம் 16பேருக்கு அபராதங்கள் விதிக்கப்பட்டுள்ளன