மட்டக்களப்பில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் இருவர் உயிரிழந்துள்ளனர். இதற்கமைய உயிரிழப்புக்களின் எண்ணிக்கை 16 ஆக அதிகரித்துள்ளதாக மட்டு.பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாள் வைத்தியர் மயூரன் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்றுக்கு போதனா வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்றுவந்த இருவரே, இன்று உயிரிழந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மட்டு.சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிலுள்ள 74 வயதுடைய ஒருவரும் ஆரையம்பதி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிலுள்ள 61 வயதுடைய ஒருவரும் இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
இதேவேளை மட்டக்களப்பில் இதுவரை ஆயிரத்து 285 பேர், கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.