ஒன்ராரியோவை அடுத்து அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி தொடர்பில் அல்பேர்ட்டா மற்றும் சஸ்காட்செவன் தமது நிலைப்பாட்டினை வெளியிட்டுள்ளன.
குறிப்பாக, அடுத்துவரும் காலத்தில் இந்தத் தடுப்பூசியை தொடர்ச்சியாக பயன்படுத்துவது தொடர்பில் ஆராய்ந்து வருவதாக குறிப்பிட்டுள்ளன.
மேலும் குறித்த தடுப்பூசி இரத்த உறைவினை ஏற்படுத்தவது தொடர்பில் சில முறைப்பாடுகளும் கிடைக்கப்பெற்றுள்ளதாக அப்பிராந்திய சுகாதாரத்துறையினர் கூறியுள்ளனர்.
இந்நிலையில் தற்போதைக்கு முதல் மருந்தளவு தடுப்பூசிகள் மட்டுமே செலுத்தப்பட்டுள்ளதாகவும் சுகாதாரத்துறையினர் குறிப்பிடுகின்றனர்.