சிறிலங்கா அரசாங்க மருத்துவமனைகளில் வழக்கமான அறுவைச் சிகிச்சைகள் பிற்போடப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
தற்போதைய கொரோனா தொற்று பரவல் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
எனினும், அவசர அறுவைச் சிகிச்சைகள், ஏற்கனவே திட்டமிடப்பட்டபடி இடம்பெறும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன் பிரதான மருத்துவமனைகளில் வெளியிடங்களைச் சேர்ந்த நோயாளர்கள் அனுமதிக்கப்படுவதும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
கொரோனா தொற்றாளர்களின் அதிகரிப்பினால், நாட்டின் பெரும்பாலான மருத்துவமனைகளின் தீவிர சிகிச்சைப் பிரிவுகள், ஏற்கனவே நிரம்பியுள்ளன.
தீவிர சிகிச்சைப் பிரிவில் தொற்றாளர்களால் ஏற்பட்டுள்ள நெருக்கடி குறைந்த பின்னரே, சாதாரண அறுவைச் சிகிச்சைகள் மீண்டும் தொடங்கப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.