இந்தியாவில் இருந்து சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக சிறிய படகொன்றின் மூலம் மன்னார் பகுதிக்கு வந்து கொண்டிருந்த மூவரையும் இந்த கடத்தலுடன் தொடர்புடைய மேலும் 2 சந்தேக நபர்களையும் கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
இவர்களில் ஒருவர் யாழ்ப்பாணம் பகுதியில் வசிப்பவர் எனவும், அண்மையில் இலங்கையில் இருந்து இந்தியாவுக்கு அவர் விமானத்தில் சென்றுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.
குறித்த கடத்தலுடன் தொடர்புடைய ஏனைய நால்வரும் மன்னார் பகுதியில் வசிப்பவர்கள் எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட அனைவரும் கடற்படையினரால் அப்பகுதியின் பொது சுகாதார ஆய்வாளர்கள் மூலம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இதேவேளை, கடற்படை மற்றும் கடலோர காவற்படையின் முழுமையான ஒத்துழைப்புடன் வடக்கு கடல் பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற தடைசெய்யப்பட்ட தொழில்முறைகளை பூரணமாக கட்டுப்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கடற்றொழில் அமைசசர் டக்ளஸ் தேவானந்தா தலைமையையில், அமைச்சரின் யாழ். காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.