இஸ்ரேலுக்கான வானூர்தி சேவைகளை எயர் கனடா இடைநிறுத்தியுள்ளது.
கடந்த செவ்வாயன்று புறப்பட வேண்டிய வானூர்தி சேவை தாமதமாகிய நிலையில் அது தற்போது ரத்துச் செய்யப்பட்டுள்ளது.
இஸ்ரேல் மீது கடந்த சில நாட்களாக ஹமாஸ் போராளிகள் தொடர் ஏவுகணை தாக்குத்தல்களை நடத்தி வருகின்றனர்.
இதனால் ரெல் அவிவ்வுக்கான வானூர்தி சேவைகளை பாதுகாப்புக் காரணங்களுக்காக இடைநிறுத்தியுள்ளதாக எயர் கனடா தெரிவித்துள்ளது.
அங்குள்ள நிலைமைகளை கண்காணித்து, மீண்டும் சேவைகளை ஆரம்பிப்பது குறித்து முடிவெடுக்கப்படும் என்று எயர் கனடா மேலும் கூறியுள்ளது.