ஒன்ராரியோவில் இன்றைதினமும் இரண்டாயிரத்துக்கு மேற்பட்ட கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
பொதுசுகாதாரப் பிரிவினரின் தகவல்களின் பிரகாரம், இரண்டாயிரத்து 320பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதேநேரம், கடந்த 24 மணிநேரத்தில் 24பேர் கொரோனா தொற்றால் மரணமாகியுள்ளனர்.
இவர்கள் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த போதும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.