தமக்கு கொரோனா தொற்றுறுதியானதாக கிழக்கு மாகாண ஆளுநர் அநுராதா யஹம்பத் தெரிவித்துள்ளார்.
அண்மையில் மூதூர் பகுதியில் அனுராதா யாஹம்பத் கலந்துக்கொண்டிருந்த நிகழ்வொன்றில் பங்கேற்றிருந்த ஒருவருக்கு, கொரோனா தொற்றுறுதியானது.
இதனையடுத்து அனுராதா யாஹம்பத் சுயதனிமைப்படுத்திக் கொண்டிருந்த நிலையில், இவ்வாறு தொற்றுறுதியாகியுள்ளது.
இதேவேளை செங்கலடி பிரதான வீதியில் உள்ள கட்டடத்தொகுதியில் சுகாதார நடைமுறைகளை மீறி பிறந்தநாள் நிகழ்வில் பங்கேற்ற 14 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்.
இந்த விடயம் குறித்து தகவலறிந்து இன்று குறித்த இடத்தை சுற்றிவளைத்த சுகாதார பிரிவினர் முகாமையாளருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுத்துள்ளனர்.
செங்கலடி பொது சுகாதாரப் பரிசோதகர் தவேந்திரராஜாவின் தலைமையில் ஏறாவூர் காவல்துறையினரின் பங்கேற்புடன் இந்த சுற்றிவளைப்பு இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.