சூயஸ் கால்வாயில் பிரமாண்ட சரக்கு கப்பல் ஒன்று அண்மையில் தரைதட்டி கப்பல் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டதையடுத்து அந்தக் கால்வாயை விரிவுபடுத்த எகிப்து திட்டமிட்டுள்ளது.
இதற்கான அறிவிப்பை எகிப்தில் சூயஸ் கால்வாய் அமைந்துள்ள இஸ்மைலியா நகரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விழாவில் சூயஸ் கால்வாய் ஆணைய தலைவர் லெப்டினன்ட் ஜெனரல் ஒசாமா ராபி அறிவித்தார்.
கால்வாயின் தென்கோடியில் சீனாய் தீபகற்பம் பகுதியில் கிழக்கு நோக்கி 40 மீட்டர் அளவுக்கு விரிவுபடுத்தவும், கால்வாயின் ஆழத்தை இப்போது உள்ள 66 அடி அன்ற அளவிலிருந்து 72 அடியாக ஆழப்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.
அதோடு, கடந்த 2015ஆம் ஆண்டு இந்தக் கால்வாயில் திறக்கப்பட்ட இரண்டாவது வழித் தடமும் 10 கி.மீ. நீளத்துக்கு விரிவுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
அதன்மூலம், இந்த இரண்டு வழித்தட கால்வாய் 82 கி.மீ. நீளம் கொண்டதாக விரிவடையும் என்பதோடு, மேலும் அதிக கப்பல்கள் எளிதாக கால்வாயை கடக்க வழி ஏற்படவுள்ளது.