ரொறன்ரோ மாவட்ட பாடசாலை சபை 2021- 2022 கல்வியாண்டில், நடுநிலை வகுப்பு மாணவர்களுக்கு, காலாண்டு மாதிரியை மீண்டும் அமுலுக்கு கொண்டு வரவுள்ளது.
இது தொடர்பாக பெற்றோர்களுக்கு ரொறன்ரோ மாவட்ட பாடசாலை சபை குறிப்பு ஒன்றை அனுப்பியுள்ளது.
இந்த மாதிரியின் கீழ், மாணவர்கள், நான்கு வெவ்வேறு காலாண்டுகளின் இரண்டு கற்கைநெறிகளை, ஒரே நேரத்தில் கீழ் தொடருவார்கள்.
ஒரே நேரத்தில் நான்கு வகுப்புகளில் மாணவர்கள் சேர்க்கப்படுகின்ற, அரையாண்டு முறைக்கு பதிலீடாக இந்த காலாண்டு முறை அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
அனைத்து பாடசாலை சபைகளையும். ஒரு கால அட்டவணையை பின்பற்றுமாறு கல்வி அமைச்சு அறிவுறுத்தியுள்ள நிலையில், தாங்கள் காலாண்டு முறையை தெரிவு செய்துள்ளதாக, ரொறன்ரோ மாவட்ட பாடசாலை சபையின் பேச்சாளர் Ryan Bird தெரிவித்துள்ளார்.