ரொறன்ரோவில் ட்ராம் வண்டி உள்ளிட்ட மூன்று வாகனங்கள் மோதிய விபத்தில், பெண் ஒருவர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Queen Street , Maclean Avenue பகுதியில் நேற்றிரவு 9.30 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தில் காயமடைந்த சுமார் 30 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார் என்று ரொறன்ரோ மருத்துவ குழுவினர் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், குறித்த வீதியில் போக்குவரத்தை நிறுத்தியிருந்தனர்.