இந்தியாவில் இருந்து நடத்தப்படும் வானூர்தி சேவைகள் மீதான தடையை எயர் கனடா மேலும் நீடித்துள்ளது.
இந்தியாவில் இருந்து தமது நிறுவனத்தின் வானூர்தி சேவைகளை ஜூன் 22ஆம் நாள் வரை இடைநிறுத்துவதாக எயர் கனடாவின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
முன்னதாக கடந்த ஏப்ரல் 22 ஆம் நாள் இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கான வானூர்தி சேவைகளை எயர் கனடா 30 நாட்களுக்கு இடைநிறுத்தியது.
எனினும் இந்தியாவில் தொற்று தீவிரமடைந்துள்ள நிலையில் இந்த தடையை மேலும் 3 வாரங்களுக்கு நீடிக்க எயர் கனடா முடிவு செய்துள்ளது.