இஸ்ரேல் – ஹமாஸ் கிளர்ச்சியாளர்கள் இடையே நடக்கும் மோதல் குறித்து தெளிவான நிலைப்பாட்டை இஸ்லாமிய நாடுகள் எடுக்க வேண்டும் என்று துருக்கி வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து துருக்கி துணை ஜனாதிபதி புபாத் ஒக்தே (Fuat Oktay) கூறுகையில், இஸ்ரேல் – பாலஸ்தீன அமைப்புகள் இடையே நடக்கும் மோதல் குறித்து ஐக்கிய நாடுகள் சபையில் நிறைய பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன.
ஆனால், முடிவு எட்டப்படவில்லை. அதற்குக் காரணம் தெளிவான நிலைப்பாடு இல்லாததே. இஸ்லாமிய நாடுகளின் தலைவர்கள் இவ்விவகாரத்தில் தெளிவான முடிவு எடுக்க வேண்டும்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.