தனிநபர் கற்றலுக்காக பாடசாலைகள் மூடப்படுவதற்கு தொழிற்சங்கத் தலைவர்கள் தான் காரணம் என்று ஒன்ராறியோ முதல்வர் டக் போர்ட் குற்றம்சாட்டியுள்ளார்.
“பாடசாலை நிலைமைகள் பெற்றோருக்கு ஒரு முக்கியமான கவலையாக உள்ளது, ஒருபுறம், சில மருத்துவர்கள் பள்ளிகளைத் திறக்க விரும்புவதாகக் கூறுகிறார்கள்.
மறுபுறம், எங்களால் இப்போது அதைச் செய்ய முடியாது என்று ஆசிரியர் சங்கங்கள் கூறுகின்றன.
சிறந்த பாதையில் முன்னோக்கி செல்ல பொது சுகாதார மருத்துவர்கள், ஆசிரியர்கள் மற்றும் தொழிற்சங்க பங்காளிகள் மத்தியில் ஒருமித்த கருத்து தேவை.
இப்போது அது இல்லை என்பதால், நாங்கள் மெய்நிகர் கற்றலைத் தொடர வேண்டிய நிலையில் உள்ளதாக என்று டக் போர்ட் கூறியிருந்தார்.
ஒன்ராறியோ முதல்வர் டக் போர்டின் இந்தக் கருத்தை, ஒன்ராறியோ ஆசிரியர் சங்கங்களின் இரண்டு தலைவர்கள் கடுமையாக விமர்சித்துள்ளனர்.