பிரதமர் ஜஸ்டின் ரூடோவை ஒன்ராரியோ முதல்வர் டக் போர்ட் கடுமையாக சாடியுள்ளார்.
கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தவதற்கான எல்லைப்பாதுகப்பு முறைமைகளை இறுக்கமாக பின்பற்றவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் விடயத்தில் தடுப்பூசி பாதுகாப்பு மற்றும் எல்லைகளுக்கு இடையிலான இறுக்கமான கட்டப்பாடு ஆகிய இரண்டு விடயங்களும் மிகவும் முக்கியமானவை என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஆனால் இந்த விடயங்களிலும் பிரதமர் ரூடோவின் செயற்பாடுகள் தோல்வி அடைந்துள்ளதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.