இங்கிலாந்தில் கொரோனா வைரஸ் தடுப்பூசிகள் 11 ஆயிரத்து 700 உயிர்களைக் காப்பாற்றியுள்ளதாக ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது.
மேலும், இங்கிலாந்தில் கொரோனா தொற்றுடன் கடுமையாக நோய்வாய்ப்பட்டிருந்த 33, ஆயிரம் பேர் வரை காப்பற்றப்பட்டுள்ளனர்.
இங்கிலாந்து பொது சுகாதார துறையின் பகுப்பாய்வின் படி, ஏப்ரல் இறுதி வரை, 70 மற்றும் 80களில் மக்கள் இறப்பு மற்றும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதில் மிகப்பெரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
38 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதினருக்கும், 18 வயதிற்கு மேற்பட்ட சுகாதார நிலை உள்ள எவருக்கும் கூடுதல் தடுப்பூசிகளை வழங்குவதற்காக லங்காஷயரின் சில பகுதிகளில் கூடுதல் தடுப்பூசி போடும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன என்றும் அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.